விருச்சிகம்

horoscope vannatamil

விருச்சிராசிக்காரர்களே ! கணக்குத் துறையில் வேலை செய்பவர்களுக்கு இது யோகமான மாதம். உங்களுக்கு வேலை சம்பந்தமான ஒரு புதுவித ஆஃபர் வரும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த நினைப்பதற்கு இது உகந்த மாதமல்ல. மாணவர்கள் தங்கள் நேரம், சக்தி அனைத்தையும் தங்கள் படிப்புக்கே செலவிடவேண்டும். துளிகூட வேஸ்ட் பண்ணக்கூடாது. அப்போதுதான் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். உங்கள் முயற்சிகளுக்கு சவால் விடும் விதமாக உங்கள் குடும்பத்தாருடன் கருத்து வேறுபாடு தவிர்க்கமுடியாமல் போகும். உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிரச்சினைக்குரிய மனிதர்களிடமிருந்து விலகியே இருங்கள். எதிரிகள் தொல்லைதர தயங்கமாட்டார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரத்த காயம் ஏற்படலாம். வருமானத்துக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். எனவே செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் மட்டுமே சேமிப்பை நினைத்துப் பார்க்க முடியும்.சிலருக்கு எதிர்பாராத விதமாக யொகம் அடிக்கும். பெண்களுக்கு யோகமான மாதம். பொன் நகை வாங்குவார்கள். நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனால் அங்கு உங்களுக்கு அமைதியான காலமாக இருக்காது.