ரிஷபம்

aries-horoscope-vannatamil-மேஷம்

உத்தியோகத்தில் உயர்ந்த பதவி கிடைக்கும்.மாணவர்கள் புத்திகூர்மையுடன் செயல்பட்டு தங்கள் படிப்பில் வேகத்தைக் காட்டுவார்கள். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். விருந்துகள், உல்லாசப் பயணங்கள் என்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனைவி குழந்தைகளுடன் நிம்மதியோடு வாழ்வீர்கள்.  உங்கள் டென்ஷன் மறைந்து உங்கள் வாழ்க்கையில்  புன்னகை பூக்க ஆரம்பிக்கும். நண்பர்களை நீங்கள் நிரந்தரமாக நம்ப முடியாது. உங்கள் சொந்தக்காரர்கள் உங்களை மதித்துப் போற்றுவார்கள். எதிரிகள் தொலைந்து போவார்கள். குடும்பத்தில்  செல்வச் செழிப்பு இருக்கும்.  அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையே உங்களுடைய வருமானத்துக்கு வழிவகுக்கும். வருமானம் நன்கு பெருகி, பேங்க் பேலன்ஸ் உயரும். பெண்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள் உங்களுக்கு லாபமளிக்கும்.