மேஷம்

aries-horoscope-vannatamil-மேஷம் மேஷ ராசிக்காரர்களே,இந்த மாத சாதகமான மாதமாகும். கடன் கொடுத்த இடங்களிலுள்ள பணம் திரும்ப வரும். அரசு வேலை கிடைக்கும் யோகம் காணப்படுகிறது. அதிகார பதவிக்கும் வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். அறிவுத் தெளிவோடு பாடங்களைப் புரிந்து படித்து நல்ல மதிப்பெண் பெறும் வழியுண்டு. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சத்துள்ள ஆகாரங்களை சாப்பிடவேண்டியது அவசியமாகிறது. கீழே விழுந்து காயம் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணைக்கு உங்கள் ஆதரவு தேவைப்படும். அவருடன் உங்களுக்கு சில கருத்துவேறுபாடுகள் தோன்றும். உங்கள் புதல்வர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சியுறுவீர்கள். உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிரான  முயற்சியில் இருப்பார்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் கடன் கொடுத்த தொகை திரும்ப கைக்கு வரும். விவசாய நிலங்கள் நல்ல விளைச்சலையும் வருமானத்தையும் கொடுக்கும். அனாவசிய செலவுகளைக் குறைத்துக்கொள்ளவில்லையென்றால் பணத் தட்டுப்பாட்டில் சிக்கிக்கொள்வீர்கள். பெண்கள் புதிய ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வார்கள்.குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பயணங்கள் அதிகமாகும்.  அவை உங்களுக்கு களைப்பை ஏற்படுத்தும்.மற்றவர்களுக்கு உதவி செய்ய முனைவீர்கள். எதிர்ப்பும் இருக்கத் தவறாது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.