மீனம்

horoscope vannatamil

மீன ராசிக்காரர்களே ! உங்கள் முயற்சிகளில் சிறிது பின்னடைவு ஏற்படும். உங்கள் வேலையைத் திறம்படவும் நேர்மையாகவும் முடித்து உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவது நல்லது. மாணவர்கள் அறிவுத் தெளிவோடு படிப்பில் கவனம் செலுத்துவார்கள்
தேர்வுகளில் ஜொலிப்பார்கள். குடும்பத்திலுள்ள பெண்களிடம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், குடும்ப அமைதி கெடும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் ஆதரவைத் தேடுவார்கள். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். கெட்ட சகவாசத்தை விட்டொழிக்கவேண்டும். இல்லாவிட்டால் அவமானங்கள் உறுதி. உங்கள் உறவினர்களிடம் சுமுகமான உறவைக் காப்பாற்றிக்கொள்வது நன்மை பயக்கும். சொத்து சேர்ககை ஏறபடும். அவசியமில்லாத செலவுகளைத் தவிர்க்கவும். அதன்மூலம் பணப்பற்றாக்குறையைத் தடுக்க முடியும். வியாபாரிகள் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்ப்பதன்மூலம் வியாபாரத்தை நஷ்டத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளலாம். உங்கள் ஆரோக்கியம் நலிவடையும். சத்தான உணவுகளை சாப்பிடுவதின் மூலம் உடல்நிலையைக் காப்பாற்றிக்கொள்ளலாம். இல்லையென்றால் மருத்துவ சிகிச்சை பெற நேரும். சிறு பிரயாணங்களையும் நீண்ட பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பயணங்கள் பலன் தராது. களைப்புதான் மிஞ்சும். மற்றவர்களுக்கு உதவிசெய்ய சந்தர்ப்பம் வாய்க்கும். யாருடனும் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்துக்கொள்ளவும். அரசுக்குச் சேரவேண்டிய கட்டணத்தகையை பாக்கி வைக்காமல் செலுத்திவிட்டால் தண்டனைகளிலிருந்து தப்பிக்கலாம்.