மிதுனம்

horoscope vannatamilமிதுனராசிக்காரர்களே… உத்தியோகத்தில் பல வெற்றிகளைக் காண்பீர்கள். ஒரு உயர் பதவி கிடைக்கும். மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் படிப்பில் முழு கவனத்தை செலுத்தாவிட்டால், படிப்பு காலை வாரிவிடும். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் சமாதானமான போக்கை கடைப்பிடிக்கவும். உங்களுடைய பழைய நண்பர்ஒருவர்  உங்களைச் சந்திக்க வருவார். நீங்கள் பழைய இனிய நினைவுகளில் மூழ்குவீர்கள். உங்கள் எதிரிகள் விலகிச் செல்வார்கள். சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும்.உங்களுக்கு எல்லா வழிகளிலும் லாபம் கொழிக்கும்,.. தங்கமூம் ரொக்கமும் மலிந்திருக்கும். கடன்களிலிருந்து முழுவதுமாக விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.  தான தருமங்களில் ஈடுபடுவீர்கள். பெண்கள் ஆடை அணிமணிகளை வாங்கிக் குவிப்பார்கள். சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். பெண்கள் தங்களை பல வழிகளிலும் அழகுபடுத்திக்கொள்வார்கள். சிறு பிரயாணங்கள் மட்டுமின்றி தொலைதூரப் பயணங்களும் மேற்கொள்வீர்கள். அவை நினைவில் நிற்கும் பயணங்களாகவே இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு  பேரும் புகழும் கிடைக்கும். நீங்கள் முடிக்க வேண்டிய பணிகள் பலவற்றை  குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். நல்ல உணவு ,நேரத்துக்கு உறக்கம் என்று நிம்மதி தரும் மாதம் இது.