மகரம்

horoscope vannatamil

மகர ராசிக்காரர்களே ! இருக்கும் வேலையிலிருந்து புதிய வேலைக்கு மாறுவீர்கள். இந்த மாதம் கடினமான வேலைகளை முடிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். பெண்களால் சகாயம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். எதிரிகள் வலுவிழப்பார்கள். உறவினர்களிடமிருந்து தற்காலிக பிரிவு ஏற்படும். உங்களுடைய நண்பரின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். பழங்கால நினைவுகளில் மூழ்குவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. உங்கள் நிதிநிலைமை நன்றாக இருக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். நிலம், வீடு, சொத்து சேர்ககை ஏற்படும். கப்பல், படகு சவாரி செய்ய நேரும். உங்கள் மதிப்பு சமூகத்தில் உயரும். குடியிருக்கும் வீட்டை மாற்றுவீர்கள். கோர்ட்டில் நீங்கள் போட்டிருக்கும் வழக்கு வெற்றியடையும்.  குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கும். உறவினர்களிடமிருந்து பிரிவு ஏற்படலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். பெண்கள் புதிய ஆடை, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வர்.