துலாம்

horoscope vannatamilதுலாராசிக்கார்களே ! பணியிடத்தில் நீங்கள் அதிகாரியை மதித்து நடக்கவேண்டும். உண்மையான உழைப்பைக் காட்டி அதிகாரியின் நன்மதிப்புக்கு பாத்திரமாக முயல்வது அவசியம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் ரிஸ்க் எடுத்தால் தப்புவது கஷ்டம். மாணவர்கள் படிப்பைத் தவிர வேறு விஷயங்களிலோ அல்லது அல்பமான பொழுதுபோக்குகளிலோ ஈடுபட்டால் வெற்றிகாண முடியாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உங்கள் புதல்வர்கள் உங்களை தலை நிமிர்ந்து பெருமையுறச் செய்வார்கள். உங்கள் நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் வகையில் தக்கவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால், உஷ்ண சம்பந்தமான சிறு சிறு வியாதிகள் வரலாம். பெண்கள் ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் பணியிடத்தில் மகிழ்வுறுவர். தேவையற்ற பயணங்களையும் அலைச்சல்களையும் மேற்கொள்வீர்கள். பயணங்கள் உங்களை களைப்படையச் செய்யும். கடவுள் உங்களை கஷ்டங்களிலிருந்து பாதுகாப்பார். வாயைத் திறக்குமுன் பலமுறை யோசிக்கவும். மாத முற்பதியில் பணத் தட்டுப்பாடு இருக்கும். அதன்பிறகு நிலமை மாறும். பண விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு கைநிறைய பணம் நிறைந்திருக்கும்.