தனுசு

horoscope vannatamil
தனுசு ராசிக்காரர்களே ! மாத முற்பாதியில் நீங்கள் ஒரு புதிய தொழிலை வெற்றிகரமாக துவங்குவீர்கள். மாதத்தின் பிற்பாதியில், நீங்கள் எதிர்பார்க்கும் புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த சரியான தருணம் இது. மாணவர்களின் கல்விக்கு இது அனுகூலமான மாதம். உங்கள் பெற்றோரும் உறவினர்களும் உங்கள் வளர்ச்சியில் பெருமையடைவார்கள்.உங்களுடைய ஆரோக்கியம் சிற்ப்பாக இருக்குமென்றாலும், உஷ்ண சம்பந்தமான வியாதிகள் தாக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணத்துக்காக காத்திருப்போருக்கு திருமண ஏற்பாடுகள் ஆரம்பிக்கும். உங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடக்கும். மாத முற்பாதியில் ஒரு பெரிய மனிதரின் சந்திப்பும் நட்பும் கிடைக்கும். உங்களிடம் உறவினர்கள் பிரியத்துடன் பழகுவார்கள். எதிரிகளின் தொல்லை இருக்கும். சொத்து வாங்க நினைப்பீர்கள். அந்த ஆசை வெற்றிகரமாக நிறைவேறும். கால்நடைகளின் மூலம் நல்ல வருமானம் வரும். செலவுகளும் நிறைய வரும். பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒரு சில பயணங்களை மேற்கொள்வீர்கள். அவை மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். உங்கள் அணுகுமுறை அனைவருக்கும் பிடிக்கும். உங்கள் பேரும் புகழும் உயரும். ஆன்மீக விஷயங்களுக்காக நேரம் ஒதுக்கி ஈடுபடுவீர்கள். வழக்குகள் வெற்றியளிக்கும்.