சிம்மம்

horoscope vannatamilசிம்மராசிக்காரர்களே ! வேலையிடத்தில் அலட்சியம் காட்டவேண்டாம். அப்படி நேர்ந்தால், வேறு வேலை தேட வேண்டியிருக்கும். பணிமாற்றமும் மாத பிற்பகுதியில் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கவனம் காட்டுவார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும்.  உறவினர்களால் துயரம் ஏற்படும். கெட்ட நண்பர்களால் துன்பம் நேரும். எதிரிகள் சின்ன சின்னத் தொல்லைகளைத் தரத் தயங்கமாட்டார்கள்.  மாத முற்பகுதியில் பணத்தட்டுப்பாடு இருந்தாலும் போகப்போக சரியாகிவிடும். வியாரிகள் லாபம் காண முடியும். ஆரோக்கியம் தொல்லை கொடுக்கும். வயிற்றுப்போக்கு, கண் மற்றும் தலை சம்பந்தப்பட்ட நோய்களர்ல் துன்பப்பட நேரும். குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தைப் பாக்கியம் உண்டாகும். பெண்கள் புதிய ஆடை அணிகலன்களை வாங்குவார்கள். பிரயாணத்தின்போது எச்சரிக்கை அவசியம். தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்ககை மேம்படும். நல்ல உணவு, நேரத்துக்கு உறக்கம் என்று மகிழ்ச்சி ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டாம். ஏமாற்றுக்காரர்களை நம்பி மோசம் போகவேண்டாம். மாத பிற்பகுதியில் வீடு மாற்றவேண்டிய சூழ்நிலை ஏறப்டும்.