கும்பம்

horoscope vannatamil
கும்ப ராசிக்காரர்களே !  உங்கள் வேலையில் நல்ல பாராட்டுகள் கிடைக்கும்.புதிய வேலைக்கு மாற நினைத்தால் அது மாதப் பிற்பாதியில் நிகழும். மாணவர்கள் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றியடைவார்கள். குடும்பத்தில் உள்ள பெண்களிடம் கருத்துவேறுபாடுகளைத் தவிர்த்துக்கொண்டால், குடும்ப அமைதியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உங்கள் ஆதரவு தேவைப்படும். தீய நண்பர்களிடமிருந்து விலகியே நில்லுங்கள். உறவினர்களிடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிவை ஏற்படுத்தும். கடுமையான உடல் உழைப்பை அளவுக்கு மீறி மேற்கொண்டால் களைப்பில் சோர்ந்துபோய் வியாதிபோல் உணர்வீர்கள். தோலில் அலர்ஜி ஏறப்டாமல் தடுக்க சுத்தமான துணிகளை உடுத்தவும். வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இல்லாவிட்டால், விபத்துக்கள் நேரலாம். வருமானம் சிறப்பாக இருக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள நேரும். தீர்த்த யாத்திரை செல்ல நேரும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்திக்கொள்ளாவிட்டால், கடுமையான விமர்சனத்துக்கு ஆளாவீர்கள். சாலை விதிகளை சரிவர பின்பற்றாவிட்டால், ஃபைன் கட்ட நேரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பணியிடங்களில் பணிகளை முடிக்க மிகுந்த சிரமப்படுவார்கள். உங்கள் தேவைகளை கணவரிடம் கேட்டுப்பெற இது சரியான தருமம் அல்ல. காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.