கன்னி

horoscope vannatamilகன்னிராசிக்காரர்களே ! சிலர் அதிகாரம் உள்ள புதிய பதவிக்கு செல்வார்கள். உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமானால், மிக உயர்ந்த பதவிகளும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். ஆன்மீக விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவார்கள். மாணவர்கள் தைர்யசாலிகளாகவும் இருப்பார்கள்.  வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்து , சண்டை சச்சரவுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. திருமணம் போன்ற விஷேஷங்களுக்கு செல்லும்போது யாருடனும் அதிகம் பேச வேண்டாம். நண்பர்களும் உறவினர்களும் பிரிந்து செல்வதால்  உங்கள் மனம் வேதனையுற நேரும். ஒரு பெரிய க்கும். எதிரிகளால் தொல்லை இருக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். உங்கள் பேச்சுத் திறமையும் உங்கள் வருமானத்தைப் பெருக்கும். ஒரு நியல்ம் வாங்கியதன் மூலம் லாபம் காண்பீர்கள். ஆடம்பர செலவு செய்யவேண்டாம். கண் , தலை சம்பந்தப்பட்ட நோய்கள் உங்களை படுத்தும். கடின வேலை முடிந்ததும் ஓய்வு அவசியம். பெண்கள் தங்க நகை வாங்குவதன்மூலம் மகிழ்ச்சியடைவார்கள். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். பயணத்தின் மூலம் களைப்புறுவீர்கள். வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விலைஉயர்ந்த பொருட்களும் உங்கள் வீட்டில் நிறையும். நல்ல உணவு உங்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்கும். குடும்பத்தில், விருந்துகளும் நடக்கும்.  நீங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்.