கடகம்

horoscope vannatamil

கடகராசிக்காரர்களே ! உங்களுக்கு உத்தியோத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்கவேண்டுமானால், வேலையில் முழு ஈடுபாடு காட்டவேண்டும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டி, நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். உங்களுக்கு குழந்தைகளைப் பற்றிய கவலைகள் மிகும். குடும்பத்தாருடன் தேவையற்ற பிரச்சினைகளையும் கருத்துவேறுபாடுகளையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் சுற்றத்தார் உங்களை மதித்துப் பாராட்டுவார்கள். நண்பர்கள் சேர்க்கை உங்களுக்கு மகிழ்ச்சி தரும். எதிரி பயம் தொலையாது. லட்சுமி கடாட்சம் ஏற்படும். முகத்தில் மகிழ்ச்சி கூடும். கையில் பணப்புழக்கம் ஏற்படும். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பார்கள். விவசாயிகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் பொருட்கள் திருட்டுப் போகும் அபாயம் தெரிவதால், ஜாக்கிரதை அவசியம் . பெண்களுக்கு திருமண யோகம் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இந்த மாதம் சுமாராக இருக்கும். சிலர் கடற் பிரயாணம் செய்வார்கள். மிக நீண்ட பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற ஆசைகள் உங்களை அலைக்கழிக்கும். வீடு மாற்றும் வாய்ப்புண்டு. மிகவும் பெரிய செல்வாக்குள்ள மனிதரின் அறிமுகம் ஏற்படும்.