காங்கேயம் காளைகளை காக்க ஈரோட்டில் மாட்டின ஆராய்ச்சி நிலையம்:

 

     காங்கேயம் காளைகளை காக்க இரண்டரை கோடி செலவில் ஈரோட்டில் kangayam bullமாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று கால்நடைத்துறை அமைச்சர் பாலாகிருஷ்ணன் ரெட்டி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கால் நடைத்துறை மீது புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் வகையில் 6 கோடியே 47 லட்சம் செலவில் புழக்கடை கோழி அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

kangayam bull1
மானாவாரி நிலங்களில் வளர்க்கப்படும் கால் நடைகளில் மலட்டுத் தன்மையை நீக்கி உற்பத்தித் திறனை அதிகரிக்க 6 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்த பாலகிருஷ்ணா ரெட்டி,
கிராமப் புறங்களில் உள்ள கால்நடை விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் 100 சிறு கால்நடை பால் பண்ணைகள் அமைக்க 1 கோடியே 25 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று கூறினார்.
உணவுக்காக நாட்டினக் கறிக்கோழிகளின் தேவை அதிகரித்து உள்ளதால், தடையின்றி மக்களுக்கு கிடைத்திட ஓசூரில் 6 கோடியே 75 லட்சம் செலவில் நாட்டினக் கோழி பெருக்க வளாகம் அமைக்கப்படும் என்று பாலகிருஷ்ணா குறிப்பிட்டார்.
காங்கேயம் காளைகளை காக்க இரண்டரை கோடி செலவில் ஈரோட்டில் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்

Tags: , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*