அய்யாக்கண்ணு மீதான தாக்குதலுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

விவசாயி அய்யாக்கண்ணு மீது அரக்கோணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.TTV

சென்னை:

மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார். இன்று அவர் சக விவசாய சங்கத்தினருடன் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வழியாக சென்றபோது பா.ஜ.க.வினர் தாக்கி உள்ளனர். இதற்கு டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர்  அய்யாக்கண்ணுவும், அவருடன் பயணித்த இயக்கத்தினரும், அரக்கோணம் வழியாக திருத்தணி செல்லும் வழியில் பாஜகவினரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக விவசாயிகளின் உரிமைக்காகவும், காவிரியின் உரிமைக்காகவும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வை நாசமாக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கெதிராகவும் மிகக் கடுமையாக போராடிவரும் ஜனநாயக போராளி அய்யாக்கண்ணு. அவர் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல் என்பது கடும் கண்டனத்திற்கு உரியது. அய்யாக்கண்ணு தனிநபர் அல்ல, அவர் ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாகத்தான் போராடி வருகிறார்.201805311542204127_1_ayyakannu._L_styvpfபாஜகவினர் சட்ட மீறல்களில் ஈடுபடும்போது தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து தயக்கம் காட்டுவது தமிழகத்தை அபாயச் சூழலுக்குத்தான் கொண்டு செல்லும் என்பதை பழனிசாமியின் அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

 

Tags: , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*