வாழ்வூதியப்படிவழங்குதல் (Subsistence Allowance) :

வாழ்வூதியப்படிவழங்குதல் (Subsistence Allowance) :தொழிலக பணி

1982 – ஆம் ஆண்டு தொழிலக பணி நிலையாணைகள் சட்டம் திருத்தப்பட்டு 10 (A) என்ற புதிய பிரிவு அதில் சேர்க்கப்பட்டது.

அதன் படி ஏதாவது புகாரின் பேரிலோ அல்லது ஒழுங்கீன நடத்தைக்காகவோ எந்த ஒரு தொழிலாளியையும் முதலாளி  இடைநீக்கம் செய்திருந்து அந்த தொழிலாளியின் மீது விசாரணை நிலுவையில் இருக்குமானால் (Suspension Pending Inquiry) அந்த இடை நீக்கம் காலத்தில் அந்த தொழிலாளிக்கு கீழ்க்கண்டவாறு  முதலாளி வாழ்வூதியப்படி கொடுத்து வரவேண்டும்.

முதல் 90 நாட்களுக்கு அந்த தொழிலாளியின் சம்பளத்தில் 50%  அளவிலான தொகையையும், 90 நாட்களுக்குள்  மேலாக இடைநீக்கம் கால முழுமைக்கும்  75% அளவிலான ஊதியத்தையும் முதலாளி வாழ்வூதியப்படியாக அவருக்கு கொடுத்து வரவேண்டும்.

இதைவிட அதிகமான தொகை (வாழ்வூதியப்படி) வேறு ஏதாவது சட்டத்தின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு கிடைக்குமானால் அந்த தொகையினை தொழிலாளி பெற்றுக்கொள்ள தடையில்லை.

வாழ்வூதியம் வழங்குவது சம்மந்தமாக ஏதாவது தொழிற்தகராறு ஏற்படுமானால் அது குறித்து முடிவு செய்ய அதனை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அந்தமுதலாளியோ அல்லது தொழிலாளியோ அனுப்பலாம். அதனை விசாரித்து தொழிலாளர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பே இறுதியானதாகும்.

தண்டனை :

இந்தச்சட்டம் அமுலாகும் தொழில் நிறுவனங்கள் கண்டிப்பாகதனது பயன்பாட்டுக்கு நிலையாணைகளை தயார் செய்து அவைகளை அனுப்பி முறைப்படி அரசிடம் (பொதுவாக தொழிலாளர்ஆணையாளர் தான் சான்றழிப்பு கொடுப்பவராக இருப்பார்) சான்றழிப்பு பெற்று அவைகளை கடைபிடிக்க வேண்டும்.

அவ்வாறன்றி மாதிரி நிலையாணைகளை தயார் செய்து அனுப்பத்தவறும் முதலாளிக்கு முதல் கட்டமாகரூ. 5000/-  வரை அபராதமும் அதனை தொடர்ந்து அந்த தவறுகை தொடர்கின்ற ஒவ்வொரு நாளுக்கும்ரூ.  200/-  வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

அது மட்டுமல்ல சான்றளிக்கப்பட்டுள்ள நிலையாணைகளுக்கு எதிராக முதலாளி செயல்பட்டால் முதலில்ரூ. 100/- அபராதமும் தொடர்ந்து அந்த தவறுகை தொடர்கின்ற ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 25/- அபராதமும் விதிக்கப்படலாம்.

எனினும் அரசாங்கத்தின் முன் அனுமதியை (previous sanction) பெற்ற பிறகே முதலாளியால் மீது வழக்கு தொடர முடியும். அப்படி தொடரப்பட்ட வழக்கினை மாநகர குற்றவியல் நடுவரோ அல்லது இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர் ஒருவரோதான் விசாரித்து தண்டனை வழங்க முடியும் என பிரிவு  13  கூறுகிறது.

Tags: , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*