புது நாளினை எண்ணி உழைப்போம்… பாரதிதாசன்

சும்மா கெடந்த நிலத்தைக் கொத்திச்gggg
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரையை ஒசத்திக்கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பாப் பயிரைப் புடுங்கி நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு

நெல்லு வெளைஞ்சிருக்கு – வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு

மண்ணைக் கிளறிக் குழியமைச்சு
வாழைக் கன்னுகளை ஊடாலே வச்சு
தண்ணி பெற அக்களை பறிச்சுச்
சந்திர சூரியர் காண ஒழைச்சு
ஒண்ணுக்கு பத்தாக் கிளைவெடிச்சு
கண்ணுக் கழகா நிண்ணு தழைச்சு

இலை விரிஞ்சிருக்கு – காய்க்
குலை சரிஞ்சிருக்கு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*