தூத்துக்குடியில் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடி விசாரணை

தூத்துக்குடியில் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடி விசாரணை; துப்பாக்கி சூடு அல்ல அது கொலை என்று பதிவு செய்தோம்: வழக்கறிஞர் ராஜராஜன் பேட்டி

தூத்துக்குடியில் நடந்தது துப்பாக்கி சூடல்ல அது ஒரு கொலை என்பதை தேசிய மனித உரிமை ஆணையத்தில் பதிவு செய்ததால் ஆணையமே நேரடி விசாரணைக்கு அதிகாரிகளை அனுப்புகிறது என்று வழக்கறிஞர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சமபவத்தை தேசிய மனித உரிமை ஆணையமே நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வழக்கு தொடுத்த வழக்கறிஞர் ராஜராஜன் டெல்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு கொலைச் சம்பவம். அந்த துப்பாக்கி சூட்டில் அடிப்படை சட்டமூகாந்திரம், நியாயம் எதுவும் இல்லை. இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையத்தின் நேரடி விசாரணை கேட்டபோது இரண்டு கோரிக்கைகளை வைத்தோம்.

ஒன்று தனி புலனாய்வு அமைப்பு துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தல், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவது.

இரண்டு துப்பாக்கி சூட்டுக்கு பின் நடந்த மனித உரிமை மீறல், குற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படவேண்டும்.

இந்த வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை நடக்கும். இவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வார்கள், பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்கள் இவர்களிடம் தங்கள் குறைகளை கூறலாம். இந்த குழுவில் ஒரு எஸ்பி அந்தஸ்து அதிகாரி, 2 டிஎஸ்பிக்கள், ஒரு இன்ஸ்பெக்டர் இருப்பார்.

இவர்கள் அனைத்து அம்சங்களையும் விசாரித்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை அனுப்புவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags: , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*