துப்பறிவாளன்:

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வரும் இப்படத்தில், அனு இம்மானுவேல், வினைய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.vishal

ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற ஒரு கதை `துப்பறிவாளன்’.

படம் குறித்து இயக்குநர் மிஷ்கின் கூறியிருப்பதாவது,
விஷாலுக்கு மிகவும் பலமான கதாபாத்திரம். படத்தில் விஷாலுடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார். ரசிகர்களை மகிழ்விக்கும் அறிவுபூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய்சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள், இதோடு இணைந்து ஒரு மெல்லிய காதல் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

ஆகஸ்டு மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீசர் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது. இப்படத்திற்கு அருள் கொரோல்லி இசையமைத்திருக்கிறார்.

Tags: , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*