தினசரி தாயும், குழந்தையும்:

VANNA TAMIL logo

        தாய் ழி குழந்தை

படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பதினான்கு வயதிற்கு மேல் படிப்பில் நாட்டம் குறைந்துவிடுவது உண்டு. படித்துக் கொண்டிருக்கும்போது படித்தது மறந்து கொண்டே வரும். அது மட்டுமல்ல வாழ்க்கையில் பிடிப்பு இருக்காது. பெரியவர்களிடம் மதிப்பு இருக்காது. மட்டுமல்லாமல் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் போய்விடும். திருமணம் செய்து பிறகும் கூட மன இறுக்கத்துடன் இருப்பார்கள்.
குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய் பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பால் நன்கு சுரக்கும்.
அடிக்கடி உடல் களைப்பாகவோ, அல்லது சோர்வாகவோ இருக்கிறதா? இவ்வாறு இருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக உணவில் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து இல்லாமையும் ஒரு காரணம் ஆகும்.
உடலில் இரும்பச் சத்து குறைந்தால் சோர்வு ஏற்படும். மந்தத்தன்மை ஏற்படும். அடிக்கடி கோபம் வரும். இரத்தம் கெடவும் ரத்தம் சோகை ஏற்படவும் வாய்ப்பள்ளது. ஞாபக மறதி எற்படும். உற்சாகமின்மை ஏற்படும்.
உடல் நலத்திற்கும், வலிமைக்கும் முக்கிய ஆதாரமே உடலில் ரத்த ஓட்டம்தான். இரத்தத்தை தன் வேலையைச் செய்யத் தூண்டுவதே இந்த இரும்புச் சத்துதான். பிராணவாயுவை உடல் முழுவதும் எடுத்துச் சென்று அது உடல் முழுவதும் பரவுவதற்கு துணை செய்வது இரும்புச் சத்துதான்.
இரும்புச் சத்திலிருந்து ஹீமோகுளோபின் உற்பத்தியாகிறது. இதிலிருந்துதான் இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த அணுக்கள் ஒரு முறை உடம்பைச் சுற்றி வந்ததும் அழிந்து விடுகின்றன. எனவே புதிதாக உற்பத்தியாக இரும்புச் சத்து வேண்டும்.
ஆகவே இரத்தத்தில் இந்தத் தேவையான மாற்றத்துக்கு இரும்புச் சத்து எப்பொழுதும் தேவைப்படுகிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இச்சத்து சேருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோதுமை, தீட்டப்படாத அரிசி, தக்காளி, முள்ளங்கி முருங்கைக்காய், வெள்ளரி, சோயாபீன்ஸ், உலர்ந்த திராட்சை, பேரீட்சை, பாதாம், தேங்காய், அரைக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பச்சைக் காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகியவற்றில் இரும்புச் சத்து உள்ளது. இவற்றில் ஏதாவது ஒன்றை மாற்றி மாற்றி தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு வர வேண்டும்.
உருளைக்கிழங்கை சமைக்கும்போது தோலோடு சமைத்துச் சாப்பிட வேண்டும். இதிலும் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது.
இதை முக்கியமாக கவனத்தில் கொண்டு இரும்புச் சத்து நிறைந்த உணவில் ஏதாவது ஒன்று தினசரி உணவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் மேலே கூறிய சோர்வு, இரத்தச் சோகை, ஞாபகமறதி, உற்சாகமின்மை போன்றவை வராது.

 

Tags: , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*