தலா ரூ. 3 லட்சம் நிவாரணம்: டிடிவி தினகரன்!

தூத்துக்குடி: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம்: டிடிவி தினகரன்!

images (1)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் தரப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் தரப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ. குமெரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் 100 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதையடுத்து, தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரகணக்கான கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதை எதிர்த்த காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும், போலீஸின் 144 தடை உத்தரவையும் மீறி போராட்டம் நடந்துள்ளது. இந்த தடையையும் மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நியாமாக போராடிய பல அப்பாவி உயிர்களை தவறான அனுகுமுறையால் பலிவாங்கிய பழனிசாமியின் அரசு நிச்சயம் அப்பாவி மக்களின் உயிர்பலிக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்.

இதையடுத்து, அங்கு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 18 பேரின் உடலிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் துப்பாக்கி குண்டுகளை நீக்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அம்மா முன்னேற்றக் கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தவே கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தற்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*