தனி ஈழம் – தொடரும் போராட்டம்

தனி ஈழம் – தொடரும் போராட்டம்  Sri-Lanka-map2

சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

தமிழர்களின் வீடு உள்ளிட்ட சொந்த இடங்கள் அந்நாட்டு அரசால் ஆக்கிரமிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர்.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலைப்புலிகள் அமைப்பில் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் வெளியானது.

இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட உலக தமிழ் ஆர்வலர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் முக்கியமாக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம், முற்றுகை போன்ற போராட்டங்களில் குதித்தனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகத்தில்; வாழும் பல்வேறு முகம்களில் இருந்து ஈழ தமிழர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் இலங்கை அரசை கண்டித்தும் அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க பல்வேறு கோரிகளை வைத்து கோஷமிட்டனர்.
இதன் எதிரொலியாக, ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்தை இந்தியா
வாய்மொழியாக ஆதரித்தது. ct1

மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையினா அரசு, தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், இலங்கையை நட்பு நாடாக இந்தியா கருதக்கூடாது என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்டும், அவர்களை கடுமையாக தாக்கியும் பின்னர் விடுவிப்பதும் தொடர்கதையாகி விட்டது.

இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் இந்தியாவில் வலுப்பெற்று வலும் நிலையில் கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை இலங்கை அரசு விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்புத் துறைமுகத்தில், கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பெரும்பாலும் இந்திய தொழிலாளர்களே பணியாற்றிவருகின்ற நிலையில், இவர்களுக்குப் பதிலாக இலங்கை பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக அவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.srilanka-ship

எனினும் இந்தியத் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றவே, இலங்கை பணியாளர்களைப் பயிற்றுவிக்குமாறு இலங்கை அரசாங்கம் கொழும்பு டொக்யார்ட நிறுவனத்தைக் கோரவுள்ளதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே, கொழும்புத் துறைமுக விரிவாக்கப் பணிகளை சீனா மேற்கொள்ளவுள்ள நிலையில், கொழும்புத் துறைமுகப் பகுதியில் செயற்படும் டொக்யார்ட்டில் இருந்து இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

எப்போது இதற்கெல்லாம் விடிவு காலம் ஏற்படும் என்பது தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Dhivya

Madras christian College  - Tambaram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*