சூப்பர் கிங்ஸ் அணி கணித்தது தவறாய் போனது:

ஐபிஎல் 2018- தவறாக போனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கணிப்ப

ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 43-வது ஆட்டம் நேற்று ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றதும் எம்எஸ் டோனி பீல்டிங்குதான் தேர்வு செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தார். வர்ணனையாளர் கூட டோனியிடம் ஆச்சர்யத்துடன் ஏன் பேட்டிங் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டார்.அதற்கு டோனி தலைமை பயிற்சியாளர் உள்பட உயர்நிலைக்குழுவின் முடிவுதான் இது என்றார். அதற்கு காரணம் உண்டு. ஜெய்ப்பூர் மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளமாக இல்லை. முதலில் பேட்டிங் செய்து 160 ரன்களுக்கு மேல் எடுத்து விட்டால், சேஸிங் செய்வது கடினம். இதனால்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் பேட்டிங் செய்த சென்னை அணி நியாயமான ஸ்கோரான 176 ரன்கள் சேர்த்தது. ஆனால் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 177 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எப்போதும் சேஸிங்கையே விரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆட்டத்தில் ஆடுகளத்தை கணித்தது தவாறாகப் போகி, தோல்வியை சந்தித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடியுள்ள 11 ஆட்டத்தில் சேஸிங்கில் ஐந்து போட்டிகளில் வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*