ஜி.எஸ்.டி. வரியால், வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தை அடைய உள்ளது

ஜி.எஸ்.டி. வரியால் வணிகம் மற்றும்                                                                                      பொருளாதாரத்தில்modiji      இந்தியா மாபெரும் மாற்றத்தை அடையவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  மூன்று  நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர்  நரேந்திர  மோடி  இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில், டெல் அவிவ் நகரில் நடைபெற்ற தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினுடன் மோடி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய மோடி, இந்தியாவில் கடந்த ஒன்றாம் தேதி அமல் படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியால், வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தை அடைய உள்ளது என கூறினார். மேலும், ஜி.எஸ்.டி மூலம் இந்தியா வெளிப்படையான வரி விதிப்பிற்கு மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதையடுத்து, இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜெர்மனிக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். ஹம்பர்க் நகரில் நாளை தொடங்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றும் அவர், உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

Tags: , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*