சென்னை உயர்நீதிமன்றம் 150வது ஆண்டுவிழா

சென்னை உயர்நீதிமன்றம் 150வது ஆண்டுவிழாவையொட்டி, சென்னை உயர்நீதிமன்றம் விழாக்கோலத்துடன் அலங்கார மின்விளக்குகளுடன் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. இவ்விழாவினை சிறப்பிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனா

இந்த சென்னை உயர்நீதிமன்றத்தை பற்றி ஒரு தொகுப்பு…

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சென்னை உயர் நீதிமன்றம் அமைந்துள்ளது. உலகில் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புடன் விளங்குகின்றது. ஆங்கிலேயர் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, 3 நீதிமன்றங்களை இந்தியாவில் நிறுவியது. இந்த மூன்று நீதிமன்றங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களி;ல் நிறுவியது.

சென்னை உயர்நீதிமன்றம் ஐ_ன் 26, 1862, ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்று உயர்நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை இராஜதானி நகரத்திற்கு விக்டோரியா பேரரசியின் கீழ் அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி நிறுவப்பட்டது. இதன் நீதிபரிபாலணை தமிழ்நாடு மற்றும் புதுவையை உள்ளடக்கியது.

ஆரம்ப காலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ‘சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்றுதான் அழைக்கப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1862- ஆகஸ்ட் 15-ம் நாள் முதல் ‘மெட்ராஸ் ஹை கோர்ட்’ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன் உயர் நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்று எழுப்பிய கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பே, சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடம் கட்டப்பட்டது.

1996 ஆம் ஆண்டு மதராசு என்பது சென்னை என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் கண்டபொழுது உயர்நீதிமன்றம் அதிலிருந்து விலக்கு பெற்று அதன் பாரம்பரியப் பெருமைக்காக மாதராசு உயர்நீதிமன்றம் என்றே வழங்கப்படுகின்றது.

இதன் கட்டுமானம் இந்தோ-சார்சியனிக் முறையில் 1892 ல் ஹன்றி இர்வின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டது. இதன் கட்டுமானம் – செப்டம்பர் 22, 1914 ல் முதல்உலகப்போரின் துவக்கத்தின்போது ஜெர்மனின் எசு எம் எசு எம்டன் போர்கப்பலின் தாக்குதலினால் சேதமடைந்தது. உயர் நீதிமன்றக் கட்டடத்தை அமைப்பதற்கு அப்போது ஆன செலவு 13 லட்ச ரூபாய். உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகவும், இந்தியாவில் முதல் பெரிய உயர் நீதிமன்றமாகவும் சென்னை உயர் நீதிமன்றம் திகழ்ந்து வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிப் பின் நீதிபதியாக உயர்ந்த முத்துச்சாமி ஐயர் வழங்கிய நுட்பமான தீர்ப்புகள்

அண்டை நாடுகளை அதிர வைத்தது. அவருடைய தீர்ப்புகளை லண்டன் பிரிவியூ கவுன்சில் தொடர்ந்து கவனித்துப் பாராட்டி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள்தான் மற்ற மாநில உயர் நீதிமன்றங்களுக்கு முன் உதாரணமாக உள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த டி.பிரகாசம், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம், சுதந்திர இந்தியாவில் செயல்பட்ட உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி போன்றவர்கள் வழக்கறிஞர்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி தந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த நீதிமன்றத்தில் தான் பழைய கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது சரியாக பராமரிக்கபடாததால் அதன் பெருமையை யாரும் அறியமுடிவதில்லை

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் தமிழக அரசின் முன்னாள் தலைமை நீதிபதிகள் பதவி வகித்த காலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*