கமல்ஹாசனுடன் டி.டி.வி. தினகரன் கூட்டணியா?

thanga tamil selvanகமல்ஹாசனுடன் டி.டி.வி. தினகரன் கூட்டணியா? – தங்க தமிழ்ச்செல்வன் பதில்

எதிர்காலத்தில் கமல்ஹாசனுடன் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இணைந்து செயல்பட்டால் ஆச்சரியமில்லை என்று தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

கடந்த 19-ம் தேதியன்று நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், ’காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் பாமக சார்பாக அன்புமணி ராமதாஸ், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட பல கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் புறக்கணித்த இக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பாக அதன் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன் கலந்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து இன்று ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தங்க.தமிழ்செல்வன், “மக்கள் நீதி மய்யம் சார்பாக, கமல்ஹாசன் நடத்திய விவசாயிகள் கோரிக்கை குறித்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்றோம். ஆனால், இந்த கூட்டணி தொடருமா? என்று இப்போது சொல்ல முடியாது. எதிர்காலத்தில் மக்கள் நலன் காக்கும், விவசாயிகளைப் பாதுகாக்கும் கூட்டணியில் நாங்கள் ஒன்றாக இணைந்தால் ஆச்சரியமில்லை” என்று கூறினார்.

Tags: , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*