ஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்:

 

cskஐ.பி.எல். 2018- பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்புள்ள அணிகள்:

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் விளையாடும் 8 அணிகளும் தலா 14 ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் மொத்தம் உள்ள 56 ‘லீக்‘ ஆட்டத்தில் நேற்றுடன் 41 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 15 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

அதிகாரப்பூர்வமாக இது வரை எந்த அணியும் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழையவில்லை. 16 புள்ளிகள் பெற்று சன்ரைசஸ் ஐதராபாத் அணி கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான். மீதியுள்ள 2 இடத்துக்கு பஞ்சாப், மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இடையே போட்டி நிலவும் ஆட்டத்தின் ஒரு அணியின் வெற்றி-தோல்வி மற்ற அணிகளுக்கு சாதகமான பாதகமான முடிவாக அமையும்

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*