ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ்த் திரை உலகின் இசைப்புயலாக மிகக் குறுகிய காலத்தில் புகழ் பெற்றவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
டைரக்டர் மணிரத்னம் இயக்கிய ரோஜா என்ற படத்தின் மூலம் 1992ல் தமிழ்த்திரை உலகின் இசையமைப்பாளராக நுழைந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இவரது தந்தை சேகரும் ஒரு இசைக்கலைஞர்தான். ஒரு இஸ்லாமியப்பெரியவரின் போதனைப்படி தந்தையின் மறைவுக்குப் பின் திலீப் என்ற தனது பெயரை ஏ.ஆர்.ரஹ்மான் என்று மாற்றிக் கொண்டார்.
தனது முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளர் என்ற தமிழக அரசின் விருதினைப் பெற்றார். ரோஜா படம் இந்தியிலும் வெளிவந்து வெற்றி கண்டது.
தமிழ்த்திரை உலகு மட்டுமின்றி இந்தித் திரைஉலகும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரத்தினக்கம்பளம் விரிந்தது.
மின்சாரக் கனவு’ படத்தில் இசை அமைத்ததற்காக 1997ல் தேசிய விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மன் தமிழக அரசும் விருது கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து அவர் இசையமைத்த காதலன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படங்களுக்கும் தமிழகஅரசின் விருது கிடைத்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த எல்லாப்படங்களும் ஹிட்டானதால் இவரது இசையமைப்புக்காகத் தயாரிப்பாளர்கள் காத்துக் கிடந்தனர்.
குறுகிய காலத்தில் ஏராளமான திரைப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கொடுத்துள்ளார்.
இவரது ‘வந்தே மாதரம்’ ஆல்பம் சர்வதேசப் புகழைத் தேடித்தந்தது.
கிழக்குச் சீமையிலே, காதலன், பம்பாய், முத்து, ஜீன்ஸ் போன்ற எண்ணற்ற படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைவெள்ளம் மகத்தான வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தமது இசையால் கவர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Tags: , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*