இந்திய அணியின் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு:

மும்பை:

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக                                                                                                          ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டார்.raviswatry
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கும்ளே. கேப்டன் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பதவி விலகினார். இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) 10 பேர் விண்ணப்பித்தனர்.
வரும் ஜூலை 26ல் இலங்கை மண்ணில் துவங்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்திய அணி செல்கிறது. இதற்கு முன் பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. இதையடுத்து, சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய பி.சி.சி.ஐ., ஆலோசனைக்குழு சார்பில், நேற்று நேர்காணல் நடந்தது.
இருப்பினும், பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இதனிடையே இன்று இந்திய அணியின் முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

Tags: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*