ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன? முழு விபரம்

ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன? முழு விபரம்:

Tamil-image (1)ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது அப்போலோ மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு செப்.27ம் தேதி, 2016 அன்று இந்த ஆடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 52 விநாடிகள் ஓடும் இந்த ஆடியோவில் தனக்கு மூச்சுத் திணறல் உள்ளதை ஜெயலலிதா மருத்துவரிடம் விவரிக்கிறார். 

ஆடியோவில் ஜெயலலிதா, திரையரங்கில் முன் இருக்கையில் உள்ள ரசிகன் படம் பார்க்கும் போது விசிலடிக்கும் சத்தம் போல தனக்கு மூச்சுத்திணறல் கேட்பதாக கூறுகிறார். 

மேலும், ரத்த அழுத்தம் எவ்வளவு என மருத்துவரிடம் ஜெயலலிதா கேட்கிறார். அவருக்கு வைத்தியம் பார்க்கும் பெண் மருத்துவர் ரத்த அழுத்தம் 140 / 80 என்று கூறுகிறார். அதற்கு ஜெயலலிதா ”எனக்கு அது நார்மல் தான்” என்கிறார்.

தொடர்ந்து, மருத்துவமனையில் நடைபெற்ற உரையாடலை பதிவு செய்பவரிடம் ஜெயலலிதா கடிந்து கொண்டு பேசுவதும் ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடர்பான தகவல்கள் எதற்கு ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜெயலலிதா இறப்பதற்கு 68 நாட்களுக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட ஆடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது, தமிழகத்தின் எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலைகளை திசை திருப்பும் முயற்சி என பல அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Tags: , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*