அகத்தீஸ்வரர் திருக்கோயில்: பஞ்செட்டி

அருள்மிகு ஆனந்தவல்லி சமேத

திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பஞ்செட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஆனந்தவல்லி சமேதஅகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 20 கிலோமீட்;டர் தூரத்தில், சென்னை – கொல்கத்தா சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சுமார் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
மூலவர் : அகத்தீஸ்வரர்
உற்சவர் : அகத்தீஸ்வரர்
அம்பாள் : ஆனந்தவல்லி
ஆகமம் : வில்வம்
திறப்பு : காலை 7.00 – 12.00 முதல் இரவு 8.00 மணிவரை

இத்திருத்தலத்தில் இறைவன் அகத்தீஸ்வரர் என்ற திருநாமத்துடன் லிங்க வடிவத்திலும் (ரூபாரூபம்), இறைவி நின்றகோலத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இறைவி தனது இடதுகாலை சற்று முன்னோக்கி வைத்து சத்ருசம்காரியாகவும் விளங்குகின்றாள். இத்தலத்தில் அகத்திய மாமுனிவர் ஐந்து யாகங்களை செய்து, இறைவனiயும் இறைவியையும் வழிபட்டார். இவ்விடம் “பஞ்சசேட்டி” என்ற திருநாமததாலும் அழைக்கப்படுகிறது.
ஸ்தலலிங்கமாக விளங்கும் ஐந்துநிலை இராஜகோபுரத்தினை தரிசனம் செய்து, உள்ளே சென்று பிரதட்சனமாக வலம் வரும்போது முதலில் விநாயகரை தரிசித்து, முருகன் சன்னதியை, இஸ்டலிங்கம், கொடிமரம், அகத்தியர் சன்னதி, சூரியர் சன்னதி கடந்து உள்ளே சென்று, நமது துன்பங்களை போக்கி முக்கண்கொண்டு நமக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் ஆனந்தவல்லி அம்மையைக் கண்டு அவளின் அருளும் அகத்தீஸ்வரர் தரிசனமும் மற்றும் அருளும் பெற்று வெளிவரலாம். திருக்கோயிலுக்கு முன்புறத்தில் “அகத்தியர் தீர்த்தம்” என்ற பெயரில் திருக்குளம் அமையப்பெற்றுள்ளது.
இத்திருத்தலத்தில். மாதபிரதோஸம். அமாவாசைபௌர்ணமி கிருத்திகை போன்ற மாதபூஜைகளுடன், ஆனித்திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, கார்த்திகைதீபம். ஆருத்ராதரிசனம், தைப்பூசம் மற்றும் பங்குனி உத்தரம் ஐப்பசி அன்னாபிஸகம் போன்ற பருவ பூஜைகள் நடைபெற்றுவருகிறது. இத்திருக்கோயில் 3 கால பூஜைகள் நடைபெற்றுவருகிறது.
திருமணத்தடை, நவகிரகதோம் போன்றவை நீங்கவும் பித்தருகளை மகிழ்வித்து அவர்களின் ஆசியைப் பெறவும், சத்ருகளின் தொல்லைகளில் இருந்து விடுபடவும் சிறந்த பிராத்தனைத்தலமாக இத்திருத்தலம் விளங்குகின்றது.

விமான நிலையம் : சென்னை
ரயில்வே நிலையம் : பொன்னேரி
பேருந்து நிலையம் : பஞ்செட்டி

 

Tags: , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*